அதிமுக எம்.எல்.ஏ சி.வி.ராஜேந்திரனுக்கு கொரோனா நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சாதாரணமாக வெளியில் சுற்றித் திரியக் கூடிய பொது மக்களை விட அமைச்சரவையில் இருக்கக்கூடிய அமைச்சர்களுக்கும் எம்எல்ஏக்களுக்கு தான் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் சட்டசபை தொகுதியில் அதிமுக எம்எல்ஏவாக இருப்பவர் தான் சி.விராஜேந்திரன். பர்கூரில் உள்ள சிந்தகம்பள்ளியை சொந்த ஊராகக் கொண்டவர், கட்சி செயல்பாடுகளில் முன்னின்று பணியாற்றுபவராம். சில நாட்களுக்கு முன்பதாக கட்சி கூட்டங்களிலும் பூமி பூஜையிலும் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பதாக இருமல் சளி மற்றும் காய்ச்சல் தொடர்ச்சியாக இருந்ததால் அவர் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்ததில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக இவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினரும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…