அனுமதியின்றி அதிமுக கூட்டம் – மண்டபத்துக்கு சீல்!
அனுமதியின்றி அதிமுகவினர் கூட்டம் நடத்த பயன்படுத்திய மண்டபத்துக்கு சீல் வைத்து நடவடிக்கை.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
தேர்தல் பிரச்சாரம்:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபக்கம் அதிமுகவில் இபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவு கேட்டு முன்னாள் அமைச்சர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தேமுதிக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கும் வாக்குசேகரிப்பு நடைபெற்று வருகிறது.
அதிமுக கூட்டம் – மண்டபத்துக்கு சீல்:
இந்த நிலையில், ஈரோடு வைராபாளையத்தில் அனுமதியின்றி அதிமுகவினர் கூட்டம் நடத்த பயன்படுத்திய மண்டபத்துக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வைராபாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தை அதிமுகவினர் அலுவலகமாக பயன்படுத்தி வந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மண்டபத்தில் பணப்பட்டுவாடா நடந்தாக வந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனைக்கு வந்துள்ளனர். சோதனைக்கு வந்த அதிகாரிகளை மண்டபத்துக்குள் விடாமல் அதிமுகவினர் அதிமுகவினர் தடுத்ததால் பரபரப்பான சூழல் நிலவியது. இதனைத்தொடர்ந்து, திருமண மண்டபத்துக்கு சீல் வைக்கப்பட்டது.