பெரியகுளம் இடைதேர்தலில் கட்சிக்காரர்களுக்கும் அறிமுகம் இல்லாத, கட்சி பொறுப்பிலும் இல்லாத சாதாரண உறுப்பினராக அரசு பணியில் இருக்கும் முருகனுக்கு சீட் கொடுக்கப்பட்டது கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கட்சி நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக பெரியகுளம் (தனி) அ.தி.மு.க வேட்பாளர் முருகனை மாற்ற அதிமுக திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று மாலை வெளியாகலாம் என தெரிகிறது
முன்னதாக, வேட்பாளர் அறிமுக கூட்டத்திலும் முருகன் கலந்து கொள்ளவில்லை. அதேபோல், சென்னையிலிருந்து தேனி வந்த ஓ.பி.எஸ்., மகன் ரவீந்திரநாத்குமார், பட்டாளம்மன் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு பிரசாரத்தைத் தொடங்கினார். அப்போது ஆண்டிபட்டி வேட்பாளர் லோகிராஜன் வந்திருந்தார். ஆனால், பெரியகுளம் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முருகன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.