#BREAKING: 14-ம் தேதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்- ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் அறிவிப்பு..!
- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கட்டம் வருகின்ற 14.06.2021 திங்கட் கிழமை நடைபெறவுள்ளது.
- சட்டமன்ற உறுப்பினர்கள் MLA ID Card உடன் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதிமுக தரப்பில் வெளியிடபப்ட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கட்டம் வருகின்ற 14.06.2021 திங்கட் கிழமை நண்பகல் 12:00 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில், சழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம்; கழக இனை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி K பழனிசாமி ஆகியோர் தலைமை நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அறிவிந்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியைக் கடைபிடித்தும், முகக் கவசம் அணிந்தன், இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும், MLA ID Card உடன் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
14.08.2021 அன்று தலைமைக் கழகத்தில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டப் மட்டுமே நடைபெற இருப்பதால், கொரோனோ பெருந்தொற்றின் காரணமாக அன்றைய தினம் கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் தலைமைக் கழகத்திற்கு வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, தலைமைக் கழக வளாகத்திற்குள் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர வேறு யாரையும் அனுமதிக்க இயலாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.