சட்டப்பேரவையில் ஜனநாயக படுகொலை.! அதிமுக எம்எல்ஏக்கள் நாளை உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு.!

Default Image

சட்டப்பேரவை நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் நாளை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று தமிழக சட்டப்பேரவையில், பல்வேறு பரபரப்பு சம்பவங்கள் நடைபெற்றன. எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மற்றும அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ்-ஐ எதிர்க்கட்சி துணை தலைவராக வைக்க கூடாது.

அதற்கு பதிலாக அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு பெற்ற ஆர்.பி.உதயகுமார் தான் எதிர்க்கட்சி துணை தலைவராக இருக்க வேண்டும். என சட்டப்பேரவையில் முழக்கமிட்டனர். இது சட்டப்பேரவையில் அமளியாக மாறியது.

பின்னர் சபாநாயகர் அப்பாவு உத்தரவின் பேரில் இபிஎஸ் மற்றும் அவரது அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

வெளியில் சென்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து தனது எதிர்ப்பை கண்டங்களாக தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது இபிஎஸ் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர். சட்டப்பேரவையில் நடந்தது ஜனநாயக படுகொலை என கூறி, அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக நியமிக்க வேண்டும் என கூறியும் இந்த உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

நாளை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என அறிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்