#BREAKING: எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி- முதல்வர் திட்டவட்டம் .!
இன்று திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டத்திற்கு சென்று கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு செய்தார். இந்நிலையில், தஞ்சையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதல்வர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தே அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைத்து வருகிறது.
இனியும் இதே நிலைப்பாடே தொடரும், தமிழகத்தில் எப்போதும் எந்த தேர்தல் நடந்தாலும் அதிமுக தலைமையிலே கூட்டணி அமையும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.
திருவாரூரில் இதே கேள்வியை காலையில் கேட்கப்பட்டபோது இன்னும் தேர்தலுக்கு 7 மாதம் இருப்பதாகவும், தேர்தல் நெருங்கும்போது கூட்டணி பற்றியும் , தலைமை பற்றியும் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார் என்பது குறிப்பித்தக்கது.