தொண்டர்களே ரெடியா…சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் – அதிமுக இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம்!

Default Image

சொத்து வரி உயர்வுக்குக் காரணமான விடியா திமுக அரசைக் கண்டித்து இன்று (5.4.2022) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவிப்பு.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள்,நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை குறைந்தபட்சமாக 25 % முதல் அதிகபட்சமாக 150 % வரை உயர்த்தி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக அரசு அறிவிப்பு விடுத்தது.ஆனால்,இதற்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில்,சொத்து வரி உயர்வுக்குக் காரணமான விடியா திமுக அரசைக் கண்டித்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று (5.4.2022) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி,சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சென்னை மாவட்டத்திலும்,அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும்,சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஈபிஎஸ் திருச்சி மாவட்டத்திலும் தலைமை ஏற்று ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கிறார்கள்.அதேபோல்,ஏனைய மாவட்டங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும், அதிமுகவின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு அதிமுக நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர்.

அதிமுகவைப் போல,தமிழக பாஜகவும் சொத்து வரி உயர்வைக் கண்டித்து 21 மாநகராட்சிகளிலும் ஏப்ரல் 8 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live 20032025
GoodBadUgly
digital scams old women
DMK MPs protest at Delhi Parliament
cm mk stalin
impact player rule in ipl
velmurugan mla