அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்- ஓபிஎஸ்&ஈபிஎஸ் அதிரடி..!

கட்சிக்கு மாசு ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டதால் எஸ்.கௌதம் என்பவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்து ஓபிஎஸ்&ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதிமுக கட்சிக்கு களங்கம் மற்றும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டார் என்று வேலூர் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.கௌதம் என்பவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மேலும்,இது தொடர்பாக அவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், வேலூர் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. E. கௌதம்,(குடியாத்தம் நகர தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைத் தலைவர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம்”,என்று தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
மருத்துவ சிகிச்சையில் அஜித்! காரணம் என்ன?
April 30, 2025
”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
April 30, 2025
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025