அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்!!
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்.
கடந்த 20ம் தேதி முதல் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனின் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிமுக நிர்வாகிகள் மதுசூதனை பார்க்க மருத்துவமனை சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ச்சியாக அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, மதுசூதனின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா உள்ளிட்டோர் ஏற்கனவே மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர் என்பது குறிப்பிடப்படுகிறது.