ஒரே அணி அதிமுக தான்..! – கே.பி.முனுசாமி
அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் என கே.பி.முனுசாமி பேட்டி.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், அதிமுக பொதுச்செயலர் தேர்தல் உள்ளிட்டவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில், கடந்த 22ஆம் தேதி 7 மணிநேரம் ஒரே நாளில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டு பதிவு செய்துகொண்ட நீதிபதி குமரேஷ் பாபு, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தார். இதனை தொடர்ந்து இன்று அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்குகளின் தீர்ப்புகள் வெளியாகும் என எதிர்ப்பாட்டது.
அதன்படி, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்தும், அதிமுக பொதுசெயலாளர் தேர்தல் குறித்தும் ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரே அணி அதிமுக தான்
இந்த உத்தரவை வரவேற்று, ஈபிஎஸ் தரப்பு பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.பி.முனுசாமி, இனிமேல் ஒரே அணி அதிமுக தான், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். தமிழகத்தின் அடுத்த முதல்வரும் ஈபிஎஸ் தான் என தெரிவித்துள்ளார்.