அதிமுக ஆட்சியில் ஊழல் செய்தவர்கள், பாஜகவில் இணைந்தாலும், ஊழல் செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது.
சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள் திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதன் பின் அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் அளிக்கும் வகையில்,வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் அறிவிப்பார் என்று தெரிவித்தார்.
மேலும், இலங்கை அகதிகள் முகாமில் உள்ள குழந்தைகள் கல்வி பெறுவதற்கும், அவர்கள் நியாயவிலை கடைகளில் பொருட்கள் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குறித்து கூறுகையில், அதிமுக ஆட்சியில் ஊழல் செய்தவர்கள், பாஜகவில் இணைந்தாலும், ஊழல் செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்றும், பாஜகவின் ஊதுகோல் தான் அதிமுக என்பது உங்களுக்கே தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…