ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவேரா மறைவுக்கு பிறகு, அத்தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.இடைத்தேர்தலில் அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவுக்காக ஆதரவு கேட்டு முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது பேசிய அவர் ஈரோடு இடைத்தேர்தலில் நாங்கள் மத்திய அரசை எதிர்த்து தான் போட்டி இடுகின்றோம்.அதிமுக மத்திய அரசுக்கு அடிமை சேவகம் செய்யக்கூடியது என்று கடந்த காலங்களில் திமுக பதியவைத்தது ,ஆனால் இந்த தேர்தலில் அது எடுபடாது.
ஏனென்றால் அவர்களை எதிர்த்து நின்றுதான் நாங்கள் இங்கு எல்லா வேலைகளையும் செய்து கொண்டு இருக்கிறோம்.பலதரப்பட்ட மக்கள் எங்களுக்கு ஆதரவு தருகிறார்கள் அதனை நாங்கள் தடை செய்ய முடியாது.மற்றபடி இந்த இடைத்தேர்தலில் அதிமுக தனது சொந்தக்காலில் தான் நின்று தான் போட்டியிடுகிறது அதை எவராலும் மறுக்க இயலாது.
எங்களுக்கு ஆதரவு அளிப்பவர்களின் சித்தாந்தங்களை வைத்து எங்களை எடைபோட வேண்டாம் என முன்னாள் அமைச்சர் மா.பாண்டியராஜன் செய்தியாள்களிடம் தெரிவித்தார்.
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…