அதிமுக ஜாதி கட்சியாக மாறி வருகிறது..ஓபிஎஸ் – இபிஎஸ் ஒதுங்கிக்கொள்ள வேண்டும் – ஆறுக்குட்டி

Default Image

ஒருங்கிணைப்பாளர் பொருப்பியிலிருந்து ஓபிஎஸ், இபிஎஸ் விளக்க வேண்டும் என்று முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி பேட்டி.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, அதிமுகவில் தற்போது நடக்கும் நிகழ்ச்சிகள் வேதனை அளிக்கிறது. எதோ விபத்தில் ஓ.பன்னீசெல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் பொறுப்புக்கு வந்துவிட்டனர். அந்த விபத்தில் வந்தவர்கள் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் நாங்கள் எல்லாரும் ஒதுங்கி இருக்கிறோம். ஆனால், தற்போது கட்சி பின்னடைவு அடைந்துள்ள நிலையில், தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் சண்டையிடுவது சரியல்ல, கோஷ்டி பூசல் சரியல்ல.

அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒதுங்கி வழிவிட வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை தொண்டர்களை கேட்டா ஏற்படுத்தினார்கள்? என கேள்வி எழுப்பினார்.எனவே, ஓபிஎஸ் – இபிஎஸ் இருவரும் விலகிக்கொள்ள வேண்டும். அதிமுகவில் நிறைய பேர் இருக்கிறார்கள், அவர்கள் பொதுச்செயலாளராக வரட்டும் அல்லது ஒற்றை தலைமை ஏற்று வரட்டும். ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு பதிலாக வேறு யாராவது அதிமுக பொதுச்செயலாளர்கள் வந்தால் பரவாயில்லை. கட்சியில் 50 பேர் சேர்ந்து, இவர்களே பதவியை ஏற்படுத்தினர் என குற்றசாட்டினார்.

நான் பேட்டியளிப்பது, இருவருக்கும் சங்கடமாக இருக்கும். ஆனால், அதிமுக இயக்கம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறன். அதிமுக தொண்டர்கள் தங்களுக்கு தேவையான தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள். கோஷ்டி பூசலால் அதிமுகவை அளிக்க இருவரும் திட்டமிட்டுள்ளதாக கூறினார். நீதான் முதல்வர் என்று கைகாட்டி பதவி கொடுத்தவர் சசிகலா. அவரைக் கேவலமாக பேசலாமா?, அதிமுக இப்பொழுது ஜாதி கட்சியாக மாறி வருகிறது. ஜெயலலிதா இருந்தால் இப்படி நடந்திருக்குமா?, குற்றசாட்டு சொல்வதற்கு எனக்கு உரிமை உள்ளது என்ற ஆதங்கத்தில் முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்