ஏழை, எளியோருக்கு உதவுவதால் அதிமுக உயிர்ப்புடன் உள்ளது – கே.பி.முனுசாமி

ஏழை, எளியோருக்கு உதவுவதால் அதிமுக உயிர்ப்புடன் உள்ளது என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் நாளை தேர்தல் நடைபெறுகிறது.அதிமுக சார்பில் நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டார்.இவரை ஆதரித்து அதிமுகவின் கே.பி.முனுசாமி நாங்குநேரியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஏழை, எளியோருக்கு உதவுவதால் அதிமுக உயிர்ப்புடன் உள்ளது. மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி உள்ளிட்ட திட்டங்களை வகுத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.