அதிமுகதான் ஜனநாயகக் கட்சி; திமுக வாரிசுக் கட்சி – ஈபிஎஸ்..!
நாமக்கல் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின் பூத் கமிட்டி கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது” நாமக்கல்லை அதிமுகவின் கோட்டையாக மாற்றியவர் தங்கமணி, இன்றைய முதலமைச்சர் அதிமுக மீது வீண் பழி சுமத்திக் கொண்டிருக்கிறார். சாதனைகளை வலைதளம் வாயிலாக கொண்டு சேர்ப்பது ஐ.டி.விங்கின் கடமை.
மரணஅடி கொடுக்கும் விதமாக அதிமுக ஐ.டி.விங் நிர்வாகிகள் செயல்பட வேண்டும். அதிமுகவில் தான் ஒரு கிளைச் செயலாளர் முதலமைச்சராக முடியும், அதிமுகதான் ஜனநாயகக் கட்சி; திமுக வாரிசுக் கட்சி இன்றைய ஆட்சியாளர்கள் பணத்தை நம்பி உள்ளார்கள், பணம் கொடுத்து வெற்றி பெறலாம் என்ற பகல் கனவில் உள்ளார்கள், நாம் மக்களை நம்பி உள்ளோம்.
அண்ணாமலை மட்டுமல்ல, அவரது தந்தை வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது – ஆர்.பி உதயகுமார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வசனங்களை பேசி மக்களை ஏமாற்றி வருகிறார். சென்னை உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு ஸ்பெயின் நிறுவனங்களை அழைத்து ஏன் ஒப்பந்தம் செய்யவில்லை? மக்கள் மீது அக்கறை இல்லாத அரசு திமுக, இந்தியா கூட்டணியில் இருந்து ஒவ்வொரு கட்சியாக பிரிந்து சென்று கொண்டிருக்கின்றன” என தெரிவித்தார்.