அதிமுக தண்ணீரில் மூழ்காத பந்து.., எவ்வளவு அழுத்தத்தினாலும் மேலே வரத்தான் செய்யும் – ஜெயக்குமார்

Default Image

அதிமுக தண்ணீரில் மூழ்காத பந்து போன்றது. எவ்வளவு அழுத்தத்தினாலும் மேலே வரத்தான் செய்யும் என ஜெயக்குமார் பேட்டி. 

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்த நிலையில், வருமான  முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உட்பட 49 இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில்,அவரது நண்பர்கள், உறவினர்கள்,ஆதரவாளர்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னையில் 6 இடங்களிலும்,கோவை,தஞ்சாவூர்,திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது இரு மகன்கள் உட்பட மொத்தம் 6 பேர் மீது திருவாரூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். இதற்க்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்  தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எம்ஜிஆர்அவர்கள் கட்சியை தொடங்கிய பல்வேறு அடக்குமுறைகளை, வழக்குகளை தாண்டி தான் அதிமுக வந்தது.  அதிமுகவை அழித்துவிடலாம் என நினைக்கிறாரகள். ஆனால், அதிமுக தண்ணீரில் மூழ்காத பந்து போன்றது. எவ்வளவு அழுத்தத்தினாலும் மேலே வரத்தான் செய்யும். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனையை நீதிமன்றம் மூலம் எதிர்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்