மக்களுக்காகவே முழுமையான அர்ப்பணிப்புடன் இயங்கக் கூடிய இயக்கம் அதிமுக என்பதற்கு இது மேலும் ஒரு சாட்சி என எஸ்.பி.வேலுமணி ட்வீட்.
உலகிலேயே அதிக உறுப்பினர்கள் கொண்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் அதிமுக 7-வது இடத்தை பிடித்துள்ளது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
அந்த பதிவில், ‘World updates தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள, “உலகிலேயே அதிக உறுப்பினர்கள் கொண்ட அரசியல் கட்சிகள்” பட்டியலில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ” ஏழாம் இடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்டு, மாபெரும் எஃகு கோட்டையாக உருவாக்கப்பட்ட அதிமுக மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர் அண்ணன் திரு.எடப்பாடியார் அவர்கள் தலைமையில் வீறுநடை போட்டு வெற்றிக் கொடியை நாட்டி வருகிறது.
கழகம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே, மக்கள் நலன் சார்ந்து மக்களுக்காகவே முழுமையான அர்ப்பணிப்புடன் இயங்கக் கூடிய இயக்கம் அதிமுக என்பதற்கு இது மேலும் ஒரு சாட்சி!’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…
சென்னை : பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் பலரும் மெட்ரோ ரயில்களை புக்கிங் செய்து வருகிறார்கள். இந்த சூழலில், பொங்கல்…