உலகிலேயே அதிக உறுப்பினர்கள் கொண்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் 7-வது அதிமுக – எஸ்.பி.வேலுமணி

spvelumani

மக்களுக்காகவே முழுமையான அர்ப்பணிப்புடன் இயங்கக் கூடிய இயக்கம் அதிமுக என்பதற்கு இது மேலும் ஒரு சாட்சி என எஸ்.பி.வேலுமணி ட்வீட். 

உலகிலேயே அதிக உறுப்பினர்கள் கொண்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் அதிமுக 7-வது இடத்தை பிடித்துள்ளது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

அந்த பதிவில், ‘World updates தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள, “உலகிலேயே அதிக உறுப்பினர்கள் கொண்ட அரசியல் கட்சிகள்” பட்டியலில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ” ஏழாம் இடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்டு, மாபெரும் எஃகு கோட்டையாக உருவாக்கப்பட்ட அதிமுக  மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர் அண்ணன் திரு.எடப்பாடியார் அவர்கள் தலைமையில் வீறுநடை போட்டு வெற்றிக் கொடியை நாட்டி வருகிறது. 

கழகம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே, மக்கள் நலன் சார்ந்து மக்களுக்காகவே முழுமையான அர்ப்பணிப்புடன் இயங்கக் கூடிய இயக்கம் அதிமுக என்பதற்கு இது மேலும் ஒரு சாட்சி!’ என பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்