அதிமுக தலைமை அலுவலக கலவர வழக்கில், இபிஎஸ் தரப்பிடம் ஆவணங்களை ஒப்படைக்கிறது ஓபிஎஸ் தரப்பு.
கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் இரு தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில், அதிமுக அலுவலகம் மற்றும் வளாகத்தில் இருந்த பொது சொத்துக்கள் சேதமடைந்தன.
இந்நிலையில், இபிஎஸ் தலைமையில் பொதுக்குழு நடந்த அன்று அதிமுக அலுவலகம் ஓபிஎஸ் தரப்பினரால் சூறையாடப்பட்டது. இதில், முக்கிய ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டது. ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன் அத்துமீறி நுழைந்ததாக இபிஎஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கில், ஓபிஎஸ் தரப்பினரால் எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்களை இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி, ஓபிஎஸ் தரப்பினர் இபிஎஸ் தரப்புனரிடம் ஆவணங்களை இன்று ஒப்படைக்க உள்ளது. அதாவது, அந்த ஆவணங்களை இபிஎஸ் தரப்பினரான அதிமுக எம்பி சிவி சண்முகம்பெற்றுக் கொள்கிறார்.
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…
HMPV வைரஸ் கொரோனா அளவிற்கு ஆபத்தானதா என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.…