#Breaking : ஒரே நாடு ஒரே தேர்தல்.! அதிமுக ஆதரவு.!
ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக இந்திய சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது .
ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முறைப்படி மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் மத்திய நாடாளுமன்ற தேர்தல் இரண்டையும் ஒரே நேரத்தில் நடத்த இந்திய சட்ட ஆணையம் இந்தியாவில் உள்ள பிரதான கட்சிகளிடம் கருத்து கேட்டது.
இந்த பதிலை பிரதான கட்சிகள் ஜனவரி 16ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இதில் அதிமுக கட்சிக்கு அதிமுக இடைகால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என இந்திய சட்ட ஆணையத்திடம் இருந்து கடிதம் அனுப்பபட்டது.
இந்த கடிதத்திற்கு பதில் கூறும் வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.