நீட், சட்ட ஒழுங்கு குறித்து பேசுவதற்கு அதிமுகவுக்கு தார்மீக உரிமை கிடையாது – செந்தில் பாலாஜி
திமுகவின் தொடர் வெற்றிகளை பொறுத்து கொள்ளாமல் பழனிச்சாமி கருத்துகளை கூறி வருகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம்
2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் தாக்கலில் பல்வேறு அறிவிப்புகள் வெளியானது.
அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பட்ஜெட் அறிக்கையை வாசிக்கத் தொடங்கிய உடனே எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்தார் மக்கள் மீது நலன் கொண்ட எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருந்தால், முழு நிதி நிலை அறிக்கையையும் கேட்டு அதன் பிறகு தன் கருத்துக்களை வெளியிட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
திமுகவின் தொடர் வெற்றிகளை பொறுத்து கொள்ளாமல் பழனிச்சாமி கருத்துகளை கூறி வருகிறார். நீட் தேர்வுக்கான மசோதா திருப்பி அனுப்பியதையே, கடந்த ஆட்சியில் மறைத்தனர்; நீட், சட்ட ஒழுங்கு குறித்து பேசுவதற்கு அதிமுகவுக்கு தார்மீக உரிமை கிடையாது.
வராலாற்று சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் மகளிருக்கு செல்போன் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.