ஜெயலலிதா நினைவு தினம் எப்போது.? விசாரணை அறிக்கையால் குழப்பம்.? அதிமுக திட்டவட்டம்.!
ஜெயலலிதா நினைவு தினம் வழக்கம் போல டிசம்பர் 5ஆம் தேதி தான் 6ஆம் ஆண்டான இந்தாண்டு அனுசரிக்கப்படும் என அதிமுக சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதன் பிறகு வருடாவருடம் அதிமுக தொண்டர்கள் டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா நினைவு நாளை அனுசரித்து வருகின்றனர். இந்த வருடம் 6ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் இந்த வருடம் சட்டசபையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதியரசர் ஆறுமுகசாமி அறிக்கையில், டிசம்பர் 4ஆம் தேதி பிற்பகல் 3.30 மணி முதல் 3.50 மணிக்குள் ஜெயலலிதா மரணம் நிகழ்ந்திருந்தகலாம் என சாட்சியங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
மேலும், ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் ஜெயலலிதா இறந்த அடுத்த வருடம் டிசம்பர் 4ஆம் தேதி திதி கொடுத்ததாக பஞ்சாங்கத்தையும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், இந்த வருடம் ஜெயலலிதா நினைவு தினம் டிசம்பர் 4ஆம் தேதி அனுசரிக்கப்படுமோ என்கிற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. ஆனால், அதிமுக செய்தி தொடர்பாளார் வைகை செல்வன் சார்பில் வெளியான செய்தி என்னவெனில், வழக்கம் போல டிசம்பர் 5ஆம் தேதி தான் நினைவு தினம் அனுசரிக்கப்படும் என தகவல் வெளிவந்துள்ளது.