இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு சரித்திரம் வாய்ந்த வெற்றி கிடைத்துள்ளது – முதலமைச்சர் பழனிசாமி

இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு சரித்திரம் வாய்ந்த வெற்றி கிடைத்துள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவையில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு சரித்திரம் வாய்ந்த வெற்றி கிடைத்துள்ளது. குடிமராமத்து போன்ற சிறப்பு வாய்ந்த மக்கள் நல திட்டங்களை அதிமுக தொடர்ந்து செயல்படுத்தி வருவதால் மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.
டெங்குவை ஒழிக்க பொதுமக்கள் தாங்களாக முன்வந்து சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் .டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசுடன் சேர்ந்து மக்களும் உதவ வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் உடனே அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024