மீண்டும் அதிமுக ஆட்சி அமைய அயராது உழைப்பேன், அதிமுக ஆட்சி அமையும் நாள் வெகு தொலைவில் இல்லை என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரான பிறகு எடப்பாடி பழனிசாமி, சொந்த ஊரான சேலத்திற்கு செல்லும் வழியில் விழுப்புரத்தில் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற நான், கட்சியை நல்லமுறையில் வழிநடத்தி மீண்டும் அதிமுக ஆட்சி அமைய அயராது உழைப்பேன் என்று கூறினார்.
மேலும் பேசிய இபிஎஸ், நமது அதிமுக இயக்கம் பல சோதனைகளை சந்தித்து தான் வந்திருக்கிறது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் தொண்டாற்றுவோம், இது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கண்ட கனவை நாம் ஒன்றாக செயல்படுத்தவேண்டும் என்று கூறினார்.
அதிமுகவை வீழ்த்த யாராலும் வீழ்த்த முடியாது, வரும் தேர்தல் அதிமுகவிற்கு விடிவு காலம். அதிமுக ஆட்சி அமைக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை, ஆட்சி அமைய தொடர்ந்து உழைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…