கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மத்திய அரசு வழங்க வேண்டிய பல கோடி ரூபாய் மானியத்தை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று சி.ஏ.ஜி அறிக்கை மூலம் அம்பலம்.
ஒரு அரசின் நிதி செலவினங்கள், கடன், லாபம் உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் இழப்பு எவ்வளவு என்று சிஏஜி அறிக்கை ஆண்டுதோறும் வெளியிடப்படும். மத்திய அரசின் செலவினங்கள் குறித்து சிஏஜி அறிக்கை வெளியிடப்படும். அதேபோல் மாநில அரசுகளின் செலவினங்கள் குறித்து சிஏஜி அறிக்கை வெளியாகும்.
மாநில அரசுகளின் சிஏஜி அறிக்கையை நிதி அமைச்சர் பொதுவாக சட்டசபையில் வெளியிடுவது வழக்கத்தில் இருந்தது. ஆனால் கடந்த 5 வருடமாக தமிழகத்தின் சிஏஜி அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் விரைவில் விளியிடப்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழகத்தின் 5 வருட சிஏஜி அறிக்கை வெளியிடப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து இருந்தார்.
இந்த சூழலில் வருவாய் மற்றும் பொருளாதாரப்பிரிவு குறித்த 2018 – 2019 மார்ச் வரையிலான சி.ஏ.ஜி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடந்த அதிமுக ஆட்சியில் காலதாமதம் உள்ளிட்ட அலட்சிய நடவடிக்கைகளால், மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு பெற்று தரவேண்டிய பல கோடி ரூபாய் மானியத்தை பெற முடியாத நிலை ஏற்பட்டது என அறிக்கை மூலம் அம்பலமாகியுள்ளது.
உணவு பதப்படுத்துதல் திட்டத்தின் கால தாமதத்தால், மத்திய அரசின் மானியம் ரூ.16.26 கோடி விடுவிக்கப்படவில்லை. ரயில்வே பால பணிகள் நிறைவு அறிக்கை அளிப்பதில் கால தாமதம் ரூ.120 கோடி நிலுவை தொகை பெறப்படவில்லை. தேசிய பால்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதியை உரிய வகையில் பயன்படுத்தத்தால் ரூ.11.52 கோடி மானியத்தை பெற முடியவில்லை.
அரசின் ஒழுங்கு முறைகளை செயல்படுத்தாததால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.71.22 லட்சம் சேவை கட்டணம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துக்கு அங்கீகாரம் பெறுவதில் கால தாமதம் என்றும் இதனால் ரூ.9.1 கோடி மானியத்தை பெற இயலவில்லை என சிஏஜி அறிக்கை மூலம் கடந்த அதிமுக ஆட்சியின் நிலை அம்பலமாகியுள்ளது.
கோட்டயம் : கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் வைக்கத்தில், தந்தை பெரியார் முன்னின்று நடத்திய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா…
கோட்டயம் : கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் மகாதேவர் கோயில் வீதிகளில், தாழ்த்தப்பட்டவர்கள் என கூறப்பட்ட மக்கள் ஒதுக்கப்பட்டதை…
சென்னை : தாழ்த்தப்பட்ட மக்கள் என ஒதுக்கப்பட்ட மக்களுக்காக, அவர்களின் உரிமைக்காக தந்தை பெரியார் முன்னின்று போராடி வெற்றி பெற்ற…
வைக்கம்: கேரள மாநிலம் வைக்கத்தில் இன்று வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில், தமிழ்நாடு…
சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா…
சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து…