நியூமோகோகல் தடுப்பூசி திட்டத்தை அதிமுக அரசு தொடங்கவில்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு ..!

Default Image

ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 10,000 படுக்கைகள் குழந்தைகளுக்காக தயார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிமுக மீது குற்றம் சாட்டியுள்ளார். 10 ஆயிரம் படுக்கைகள் குழந்தைகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளது. ஆன்மீக தளங்களில் தளங்கள் உள்ள இடங்களில் ஜூலை இறுதிக்குள் அனைவரும் தடுப்புசி செலுத்தி முடிக்கப்படும். தடுப்பு சட்டத்தின் மூலம் நியூமோகோகல் நடைமுறைக்கு வந்தது. ஆனால் அதிமுக இதை நடைமுறைப்படுத்தவில்லை.

மூளைக் காய்ச்சல், நிமோனியா வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி திட்டத்தை அதிமுக அரசு தொடங்கவில்லை. இந்தியாவில் 21 மாநிலங்களில் நிமோனியா எதிர்ப்பு தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 21 மாநிலங்களில் தொடங்கிய பிறகும் இரண்டு ஆண்டுகளாக நியூமோகோகல் தடுப்பூசி திட்டத்தை அதிமுக அரசு தொடங்கவில்லை. தடுப்பூசி பற்றிய வெள்ளை அறிக்கை கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி ஆட்சியில் குழந்தைகளுக்கான திட்டம் தொடங்கவில்லை.

மூளைக்காய்ச்சல் நிமோனியாவை தடுக்கும் நியூமோகோகல் தடுப்பூசி வெளிச்சந்தையில் ரூ.4,000க்கு விற்பனை. குழந்தைகளுக்கு ஒன்றரை மாதத்தில் ஒரு ஊசி, மூன்றே மாதத்தில் அடுத்த ஊசி ஒன்பதாவது மாதத்தில் கடைசி ஊசி போட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி திட்டப்படி இலவசமாக நியூமோகோகல் ஊசி போடப்படும். தனியார் மருத்துவமனையில் போடுவதாக இருந்தால் ஒரு குழந்தைக்கு 12 ஆயிரம் வரை செலவு செய்யவேண்டியிருக்கும்.

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் நிமோனியா மூளைக்காய்ச்சல் 12 லட்சம் குழந்தைகள் இறந்துள்ளன என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்