தமிழகத்தில் கொரோனா 2-ம் அலைக்கு காரணம் கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய அதிமுக அரசு தான் – முதல்வர்!

Default Image

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை ஏற்படுவதற்கு காரணம் முந்தைய அதிமுக அரசு கட்டுப்படுத்த தவறியதுதான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடத்தில் தனியார் தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடக் கூடிய பணியை துவக்கி வைப்பதற்காக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சென்றிருந்தார். பின் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த பின்பதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் எனவும், தீவிர ஊரடங்கிற்கு பலன் கிடைக்க துவங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும்  தேவை இருக்குமானால் முழு ஊரடங்கு நீக்கப்படும் எனவும் கூறியுள்ள அவர், தற்பொழுது ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் தட்டுப்பாடு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் முந்தைய அதிமுக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த தவறியதால் தான் இரண்டாம் அலை தற்பொழுது ஏற்பட்டுள்ளதாகவும், இரண்டாவது அலையை முற்றிலும் ஒழித்து திமுக அரசு வெற்றி அடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 26032025
RIP Manoj
TN GOVT
Edappadi Palanisamy
ramandeep singh yuvraj singh
LPG Lorry Strike
thambi ramaiah manoj bharathiraja