அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரி ஓபிஎஸ் தரப்பு முறையீடு.. நாளை விசாரணை!
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முறையீடு.
அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கபட்ட நிலையில், இன்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரி ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த மனோஜ் பாண்டியன் அவசர முறையீடு செய்துள்ளார். இந்த முறையீட்டை அவசர வழக்காக மனுதாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்புக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நாளை காலை 10 மணிக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு ஓபிஎஸ் தரப்பு மனு விசாரணைக்கு வருகிறது. இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரி ஓபிஎஸ் தரப்பு வழக்கு தொடர்ந்த நிலையில், இபிஎல் தரப்பு அவசர ஆலோசனை மேற்கொள்கிறது. சென்னையில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பொதுச்செயலாளர் தேர்தலுக்கு சட்ட சிக்கல் வந்தால் என்ன செய்வது என்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.