அதிமுக பொதுச்செயலாளர் – ஆவணங்கள் சமர்ப்பிப்பு!
பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வானதை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்தியது அதிமுக.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளித்து, ஓபிஎஸ் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தனி நீதிபதி தீர்ப்பை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் தலைமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் தலைமை தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அளிக்கப்பட்டன.