அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு..!
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தளுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மதியம் 3 மணியுடன் நிறைவடைந்ததது. அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கபட்ட நிலையில், தேர்தலில் போட்டியிட இன்று 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இன்றும் தொடர்ந்த மனுத்தாக்களில் இரண்டு நாட்களில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 221 பேர் விருப்பமனு பெற்றுள்ளனர். எடப்பாடி பழனிசாமி தவிர வேறு யாரும் பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியின்றி தேர்வாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.