உழைப்பும்,விஸ்வாசமும் தான் அதிமுகவில் என்னை உயர் நிலைக்கு வந்துளேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அதிமுக கட்சியின் ஐடிவிங் எனப்படும் இணையதள பிரிவு நிர்வாகிகள் நேற்று பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரில் முக்கிய நிர்வாகிகளுடன் டிவிட்டர் ஸ்பேஸிங் நடத்தினர். இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார் .
1974இல் அரசியல் பயணம் :
அப்போது அவர் பேசுகையில், 1974 ஆம் ஆண்டு அதிமுக கிளை செயலாளர் என அரசியல் பயணத்தை தொடங்கினேன். பிறகு பல்வேறு பொறுப்புகளை நான் வகித்துள்ளேன். தொண்டனாக படிப்படியாக உயர்ந்து தற்போது அதிமுக பொதுச் செயலாளராக உயர்ந்துள்ளேன் என தனது அரசியல் பயணத்தை அந்த ட்விட்டர் ஸ்பேஸில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
உயர்பதவி :
அவர் மேலும் பேசுகையில், என்னுடைய வாழ்க்கையில் பல்வேறு தடைகள் வந்துள்ளன. அரசியல் ரீதியாக அதனை எதிர்கொண்டேன். எந்த தொண்டனும் கடினமாக உழைத்தால் அதிமுக தலைமைக்கு விசுவாசமாக இருந்தால், உயர்ந்த பதவி கிடைக்கும் கிடைத்துக் கொண்டே இருக்கும்.’ என குறிப்பிட்டார்.
அதிமுகவின் சோதனை :
இந்தியாவில் இருக்கும் பல்வேறு கட்சிகளில் ஜனநாயக அமைப்புள்ள கட்சி என்றால் அது அதிமுக தான் என குறிப்பிட்டார். அதிமுகவில் என்றைக்குமே உழைப்பவர்களுக்கு மரியாதை கிடைக்கும் என குறிப்பிட்ட அவர், எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் கட்சி இரண்டாக பிரிந்தது. பின்னர் ஜெயலலிதா பல்வேறு சோதனைகளை வென்றெடுத்து சாதனை படைத்தார். அவருடைய ஆட்சிக்காலமானது பொற்கால ஆட்சியாக இருந்தது என குறிப்பிட்டார்.
பெரும்பான்மை :
அதன்பிறகு இரு பெரும் தலைவர்கள் மறைவுக்கு பின்னர் அதிமுக பல்வேறு சோதனைகளை சந்தித்து பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டார். அந்த சமயம் சட்டமன்றமே அலங்கோலமாக காணப்பட்டது.
இபிஎஸ் குற்றசாட்டு :
எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் எப்படி எல்லாம் சட்டமன்றத்தில் நடந்து கொள்ளக் கூடாதோ அப்படியெல்லாம் நடந்து கொண்டார். அதனை எல்லாம் மீறி ஆட்சியை காப்பாற்றினோம். இன்றைக்கு சில பேர் (ஓபிஎஸ்) நீதிமன்ற மூலம் எப்படியாவது கட்சியை கைப்பற்ற வேண்டும் என நினைக்கிறார்கள் எனவும் மறைமுகமாக குற்றம் சாட்டினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு இன்னும் என்னென்ன சர்ப்ரைஸான விஷயங்கள் எல்லாம் இருக்கப்போகிறதோ என்கிற…
சென்னை : வைகோ அப்பலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வலது தோள்பட்டை காயம் காரணமாக 2 நாள்களுக்கு முன்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…