இதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் வழங்கலாம்.. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விமர்சனம்!
சென்னை பெருங்குடியில் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்தார். அதன்பின், மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார். இதனைத்தொடர்ந்து சென்னை பள்ளிக்கரணையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், திமுக ஆட்சியில் நடக்கிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் பருவமழை தொடங்குவதற்கு முன்பே நடவடிக்கை எடுக்கப்பட்டது.
திமுக ஆட்சியில் திட்டமிட்டு செயல்படாததே மக்களின் இன்னல்களுக்கு காரணம். வானிலை ஆய்வு மையம் அறிவித்த பிறகு கூட தற்போதைய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ளாததால் சென்னை மற்றும் புறநகரில் மழை நீரில் தத்தளிக்கிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் 12வது முறையாக நீட்டிப்பு!
இதனால் மக்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். எப்போது மோட்டார் வாங்கி, எப்போது தண்ணீரை வெளியேற்றுவார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கூறுகையில், மழை வந்த பின்னரே ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். மக்கள் உணவுக்கு வழியின்றி தவிக்கின்றனர்.
ஒரு மழைக்கே தாங்க முடியாத நிலையில் சென்னை உள்ளது. ரூ.4,000 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் அமைந்திருப்பதாக முதலமைச்சர், அமைச்சர் கூறி வந்தனர். மழைநீர் வடிகால் பணிகளை உரிய நேரத்தில் முடிக்கவில்லை. எல்லாம் செய்துவிட்டதாக அமைச்சர்கள் கூறும் நிலையில், மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.
சென்னை வெள்ள பாதிப்புகளை தொலைக்காட்சியில் மக்கள் பார்க்கக்கூடாது என்பதற்காகவே உள்நோக்கத்தோடு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என குற்றச்சாட்டிய இபிஎஸ், செயற்கை வெள்ளம், இயற்கை வெள்ளம் என திசை திருப்பும் முதல்வர் ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் வழங்கலாம் எனவும் விமர்சித்துள்ளார்.