வேட்புமனு.. வாக்குப்பதிவு.. வாக்கு எண்ணிக்கை.! அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு.!
மார்ச் 26ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெற உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த வரையில் அவர் வகித்த பதவி தான் பொது செயலாளர் பதவி. அவர் மறைந்த பிறகு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என ஓபிஎஸ் – இபிஎஸ் நியமிக்கப்பட்டனர். அதன் பிறகு இருவரும் பிரிந்து, தற்போது கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுச்செயலாளர் தேர்தல் :
இந்நிலையயில் முறையாக அதிமுகவில் எப்போது பொதுச்செயலாளர் தேர்தல் வரும், அதிமுக தொண்டர்கள் வாக்களித்து பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பர் என எதிர்பார்த்த நிலையில், நேற்று இரவு அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேட்புமனு தாக்கல் :
அதன் படி, மார்ச் 26இல் அதிமுகவில் முதன் முறையாக பொதுச்செயலார் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 18 (இன்று) மற்றும் 19 (நாளை) நடைபெறுகிறது. 20ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான விசாரணை நடைபெற உள்ளது.
தேர்தல் நாள் :
மார்ச் 21இல் வேட்புமனுவை திரும்ப பெற விரும்பும் வேட்பாளர்கள் அதனை திரும்ப பெறலாம். அடுத்து மார்ச் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலை அடுத்து , மார்ச் 27இல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இபிஎஸ் வேட்புமனு :
வேட்புமனு தாக்கல் முதல் நாளான இன்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.