அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு; சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை.!
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை மற்றும் கடந்த வருடம் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்குகள் விடுமுறை நாளான இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
மார்ச் 26ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில் அதனை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பில் அவரின் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், மற்றும் ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை அவசர வழக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் நீதிபதி குமரேஷ்பாபு முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களுக்கு பின் தேர்தல் நடத்த அனுமதி அளித்து முடிவுகளை வெளியிட காத்திருக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இதேபோல் ஏப்ரல் 11க்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கும் சேர்த்து இன்று விசாரிக்கப்பட்டு மார்ச் 24இல் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்குகள் இன்று நீதிபதி குமரேஷ்பாபு முன்னிலையில் விசாரணைநடைபெற இருக்கிறது.