234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஈபிஎஸ்!
எடப்பாடி பழனிசாமி, 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி. வேலுமணி பேட்டி அளித்துள்ளார்.
சென்னை: 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயுத்தமாகி வருகின்றனர். இந்த முறை நடிகர் விஜய்யின் தவெகவும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் கடும் போட்டிகள் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அதிமுக தெரிவித்துள்ளது. இத்தகவலை அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் S.P.வேலுமணி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
வரும் 31ம் தேதி கோவையில் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். அதன்படி, 31 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி இந்த சுற்றுப்பயணத்தை கோவையில் இருந்து தொடங்கவுள்ளார். கோவையில் இன்று நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய எஸ்.பி. வேலுமணி, அதிமுக ராணுவம் மாதிரிதான். அம்மா இருந்தபோது எப்படி இருந்தீர்களோ, அதேபோல இருக்க வேண்டும்.
அம்மா இருக்கும் போது என்னை பதவியில் இருந்து தூக்கிவிட்டு வெறும் உறுப்பினராக மாற்றினார். அதேபோல, சிலரது பதவிகள் மாறினால் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிமுகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 2 கோடியாக எடப்பாடி பழனிசாமி உயர்த்தியுள்ளார்” என்று அவர் பேசிருக்கிறார்.