மழை காரணமாக அதிமுக பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு – ஈபிஎஸ்

edappadi

கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பொதுக்கூட்டம், வரும் 4-ஆம் தேதி தஞ்சாவூட்டில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 52-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள், 4.11.2023 அன்று தஞ்சை மாநகரில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சூர்யா சிவாவுக்கு மீண்டும் கட்சியில் பொறுப்பு!

தற்போது, டெல்டா மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்து வருவதாலும், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருப்பதாலும், 4.11.2023 அன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, 16.11.2023 – வியாழக் கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறும்.

தஞ்சை மாநகரில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் பங்கேற்று சிறப்புப் பேருரை ஆற்ற உள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின்
ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்