ADMK Chief secretary Edappadi Palanisamy [File Image]
சென்னை, வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் காலை 10.35 மணிக்கு அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கழக சட்ட திட்ட விதிகள் 19(vii) மற்றும் 25(ii)-ன்படி, வருகின்ற 26.12.2023 செவ்வாய் கிழமை காலை 10.35 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
சட்டப்படி விசாரணை நடத்தலாம்… இபிஎஸ்-க்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
சென்னை : சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T20 தொடரில், 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. சர்வதேச…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று…
சென்னை : பனையூரில் உள்ள த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் செருப்பு வீசிய நபரால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இளைஞர்…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நேற்று மாலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று…