அதிமுக பொதுக்குழு செல்லும் – மேல் முறையீடு செய்வோம் : ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்
உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என வைத்திலிங்கம் பேட்டி.
அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி – சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, 2022, ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என தீர்ப்பளித்துள்ளனர்.
மேல்முறையீடு செய்வோம்
இந்த தீர்ப்பை தொடர்ந்து அதிமுகவினர் பட்டாசுவெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த தீர்ப்பு குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். பொதுக்குழு கூட்டியது செல்லும் என கோர்ட்டு கூறியுள்ளது. தீர்மானம் செல்லும் என சொல்லவில்லை. இந்த தீர்ப்பால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.