அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கு.! இபிஎஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகரும் ஐகோர்ட்டில் வழக்கு.
2022 ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களை எதிர்த்து மனோஜ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதற்கு பதில் அறிக்கை தாக்கல் செய்ய இபிஸ் தரப்புக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, மனோஜ் பாண்டியன் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர இருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இபிஎஸ் கோரிக்கை:
அந்த மனுவில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் அமலுக்கு வந்து 8 மாதங்களுக்கு பின் மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்துள்ள வழக்கு செல்லாததாகி விட்டது. எனவே, மனோஜ் பாண்டியன் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று இபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைத்திருந்தனர்.
ஓபிஎஸ் தரப்பு பதிலளிக்க உத்தரவு:
இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதில் மனுவுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லாது என அறிவிக்க கோரி மனோஜ் பாண்டியன் தொடர்ந்த வழக்கில் நேற்று பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இரு வழக்கு:
இதனிடையே, அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகரும் வழக்குக்கு தொடுத்துள்ளனர். ஓபிஎஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.