அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் : முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

Default Image

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது .இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  • உள்ளாட்சித் தேர்தல் அதிமுக,கூட்டணி கட்சிகள் வெற்றிக்காக உழைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • அரசுக்கு எதிராக திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது  குடும்பத்தினர் பொய்  பிரச்சாரம் செய்வதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • இலங்கையில் உள்ள தமிழர்கள் சம உரிமை பெற்று வாழ்வதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டியதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  •  விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றிக்கு ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்சுக்கு  பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • இருமொழிக் கொள்கை, மாநில சுயாட்சி, அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் கல்விமுறையில் அதிமுக அரசு பயணிக்கும் என்பதில் உறுதி என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • கீழடி அகழ்வாராய்ச்சியின் மூலம் தமிழர்களின் தொன்மையை உலகறிய செய்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • காவிரி, கோதாவரி இணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • தொழில் முதலீடுகளை ஈர்க்க உலக முதலீட்டாளர்கள் மாநாடு, வெளிநாட்டு பயணம் ஆகியவற்றிற்காக தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு நாள் கொண்டாடிய தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • பிளாஸ்டிக் ஒழிப்பில் முன்னோடி மாநிலமாக திகழும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்