அதிமுக பொதுக்குழு வழக்கு முடித்துவைப்பு…தேர்தல் ஆணையத்திற்கு கால அவகாசம்.!
அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்து 10 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தகவல்.
இபிஎஸ் மனு
அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு கொடுத்திருந்தார். இந்த மனு விசாரணை கடந்த 10-ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அங்கு எடப்பாடி பழனிசாமியின் மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மற்றும் தேர்தல் ஆணையம் சார்பில் கோரிக்கை வைத்தனர்.
அதற்கு, கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிட உள்ளதால் வழக்கை விரைந்து விசாரித்து உத்தரவிட வேண்டும் என எடப்பாடி தரப்பு வாதம் செய்தனர். இதனையடுத்து, இந்த விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஏப்ரல் 12-ஆம் தேதி ஒத்திவைப்பதாக அறிவித்து இருந்தது.
அதிமுக பொதுக்குழு வழக்கு முடித்துவைப்பு
இந்நிலையில், இன்று விசாரணைக்கு வந்த எடப்பாடி பழனிசாமி கொடுத்த அந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவெடுக்க 10 நாள் அவகாசம் வழங்கி வழக்கை முடித்து முடித்துவைக்கப்பட்டுள்ளது.
இதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் உரிய அதிகாரிகளிடம் கேட்டு சொல்கிறோம். எனவே, இதில் முடிவெடுக்க 10 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என கேட்டிருந்த நிலையில், அதற்கான அவகாசம் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கு முடித்து வைத்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்கள் விஷயம் என்னவென்றால், நீதிமன்றம் உத்தரவின் கீழ் இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டிய கட்டாயமில்லை. தன்னிச்சையாக செயல்பட தேர்தல் ஆணையத்திற்கு உரிமை உண்டு. இதனால், டெல்லி நீதிமன்ற தீர்ப்பு எவ்வாறு வந்தாலும், அது தேர்தல் ஆணையத்தில் செயல்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.