அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையில் ஒபிஎஸ் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
கடந்த வருடம் ஜூலை மாதம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று, இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் தற்போது ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதிமுகவின் சட்ட விதிகளுக்கு முரணாக, குழப்பம் ஏற்படுத்துவதை இபிஎஸ் தரப்பில் செயல்படுவதாகவும், புதிய விதிமுறைகளை பின்பற்றுவதாகவும் ஓபிஎஸ் தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது.
மேலும் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவைத்தலைவர் முறை என்பது தவறானமுறை என்று ஓபிஎஸ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. மற்றும் அவைத்தலைவர் பொறுப்புகள் பற்றி நீதிபதிகள் கேட்டபோது, பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூட்டுவது பற்றி முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்டவர் என ஓபிஎஸ் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
பொதுக்குழு, செயற்குழு கூடுவதற்கு மொத்த உறுப்பினர்களில் 5இல் ஒரு பங்கினர் குழு கூடுவதற்கு கோரிக்கை வைக்கும்போது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் சேர்ந்து கூறும்பட்சத்தில் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூடும் எனும் கட்சி விதியை மேற்கோள் காட்டி கூறப்பட்டது.
பொதுச்செயலாளர் பதவி என்பது ஜெயலலிதாவிற்கு மட்டுமே உரியது, இனி அந்த பதவிக்கு தேர்தல் நடத்தக்கூடாது என முடிவு செய்யப்பட்டபிறகு தற்போது மீண்டும் அதைக் கொண்டுவர முயற்சிப்பது கட்சியின் அடிப்படை சட்ட விதிகளுக்கு முற்றும் எதிரானது என்றும் நீதிமன்றம் இந்த முடிவுகளை ரத்து செய்யவேண்டும் என்றும் ஓபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…