அதிமுக பொதுக்குழு வழக்கு.! தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதி.!
அதிமுக கட்சி விதிகளை நீதிபதி உத்தரவின் பெயரில் தமிழில் வாசிக்கும் பொது கூட்டம் , மேற்படி ஆகிய வார்த்தைகளுக்கு ஆங்கில அர்த்தத்தை உச்சநீதிமன்ற நீதிபதி கேட்டுக்கொண்டார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணை தொடங்கியது. ஜூலை 11-இல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் தொடங்கி, இன்று 3 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அப்போது அதிமுக கட்சி விதிகளை தமிழில் படிக்குமாறு நீதிபதி தினேஷ் மகேஸ்வரி கூறினார். அதனை ஏற்று மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் விதிகளை வாசிக்க தொடங்கினார்.
அவர் விதிகளை கூறுகையில் , கோரிக்கை கடிதம் வந்த பிறகு 30 நாட்களுக்குள் கட்சி கூட்டம் நடத்த வேண்டும். அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்ட 15 நாட்களுக்குள் கூட்டம் நடத்த வேண்டும். என குறிப்பிட்டார்.
அப்போது, நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, ‘கூட்டம்’ மற்றும் ‘மேற்படி’ இந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் கேட்டார். இதற்கு உரிய ஆங்கில அர்த்தத்தை கூறுமாறு உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி கேட்டுக்கொண்டார்.