உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு.! விசாரணை நாளை ஒத்திவைப்பு.!
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை ஒத்திவைப்பு.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்து இருந்தது.
இந்த வழக்கு விசாரணை வாதங்கள் நேற்று முதல் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்துள்ளனர்.
இந்த வாதங்களை ஏற்று நாளை நண்பகல் 12 மணிக்கு இந்த வழக்கு விசாரணையை தற்போது ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம். நாளை இந்த வழக்கு விசாரணையில் இபிஎஸ் தரப்பு தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.