அதிமுக பொதுக்குழு: சுடச்சுட தயாராகும் காலை – மதியம் சாப்பாடு.!

ADMK

சென்னை வானகரத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருறகிது. அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இந்த செயற்குழு ,பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

இந்த பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டணி விவகாரம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. அதற்கேற்றாற்போல இன்றைய அதிமுக கூட்டத்தின் முகப்பு தோரணங்கள் எல்லாம் பழைய பாராளுமன்ற கட்டம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதலில் செயற்குழுவில் பிரதான கட்சி நிர்வாகிகள் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. பின்னர் அந்த முடிவுகள் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த நிலையில், செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளும் தொண்டர்களுக்கு காலை மற்றும் மதியம் என இரண்டு வேளைக்கு சுடச்சுட சாப்பாடு தயார் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. சுமார், 5000 பேருக்கு இன்று இருவேளையும் அறுசுவை விருந்து தயாராகிறது. தற்போது, என்னென்ன சாப்பாட்டு வழங்கபடுகிறது என்பது குறித்த மெனு வெளியாகியுள்ளது.

ஆண்டுகள் கடந்தும் நீங்காத சோகம்! சுனாமி 19-ஆம் ஆண்டு நினைவு தினம்!

சாப்பாட்டு மெனு

அல்வா, வெஜ் பிரியாணி, வெங்காயம் வெள்ளரி மாதுளை தயிர் பச்சடி, பருப்பு வடை, புடலங்காய் கூட்டு, கோஸ், பீன்ஸ் கேரட் பொரியல், உருளைக் கிழங்கு மசாலா, வெண்டைக்காயை மொச்சை மண்டி, வத்தக் குழம்பு, கத்தரிக்காய் முருங்கைக்காய் பீன்ஸ் சாம்பார், போண்டா மோர் குழம்பு, தக்காளி ரசம், தயிர், ஊறுகாய், அப்பளம், பருப்பு நெய், மோர் மிளகாய், அடைப்பிரதமன் பாயாசம், வாழைப்பழம், ஐஸ்கிரீம், பீடா, வாட்டர் பாட்டில்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்