ஆரம்பமே அதகளம்… அதிமுக செயற்குழு கூட்டத்தில் ‘முகப்பு’ டிவிஸ்ட்.!
இன்று சென்னை வானகரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக கட்சியின் செயற்குழு கூட்டம் மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கான முன் ஏற்பாடுகள் வெகு தீவிரமாக நடைபெற்று தற்போது அதிமுக தொண்டர்கள், முக்கிய பிரதிநிதிகள், முன்னாள் அமைச்சர்கள் என பலரும் பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.
அதிமுக கொடி தான்… எவன் சொன்னாலும் கேட்க மாட்டோம்..! ஓபிஎஸ் ஆதரவாளர் அதிரடி.!
இந்த பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டணி விவகாரம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. அதற்கேற்றாற்போல இன்றைய அதிமுக கூட்டத்தின் முகப்பு தோரணங்கள் எல்லாம் பழைய பாராளுமன்ற கட்டம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த கட்டட முகப்பு அலங்காரம் தான் தற்போது அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது, பழைய பாராளுமன்ற கட்டடம் தற்போது புழக்கத்தில் இல்லை. ஆளும் பாஜக அரசு புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டியது. அதில் தான் இறுதியாக குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றது. ஏற்கனவே , தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி முறிந்து இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக தரப்பினரும் அதிகாரபூர்வமாக தெரிவித்து வருகின்றனர். இப்படியான சூழலில் பாஜக அரசு கட்டமைத்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தை தவிர்த்து பழைய நாடாளுமனற கட்டடத்தை முகப்பு தோரண படமாக வைத்து இருப்பது மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி முறிவு என்பதை தெளிவுபடுத்துகிறது போல உள்ளது என அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவுகிறது.
அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இந்த செயற்குழு ,பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்னும் சற்று நேரத்தில் பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு வரவுள்ளார். முதலில் செயற்குழுவில் பிரதான கட்சி நிர்வாகிகள் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. பின்னர் அந்த முடிவுகள் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட உள்ளது.