பாஜகவில் மீண்டும் இணைந்தார் அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன்.
அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன், டெல்லியில் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். கடந்தாண்டு அக்டோபரில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், டெல்லியில், பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் மற்றும் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் முன்னிலையில் பாஜக இணைந்தார்.
1999-ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மைத்ரேயன், தற்போது மீண்டும் பாஜகவில் தஞ்சமடைந்தார். 1999 முதல் 2000 வரை மாநில தலைவராகவும் பணியாற்றிய இவர், 2000 ஆம் ஆண்டில் பாஜகவிலிருந்து விலகி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்.
அதிமுகவில் இருந்தபோது கட்சியின் முக்கிய பொறுப்புகளையும், மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார். குறிப்பாக, ஜெயலலிதா தலைமையில் இருக்கும்போது மைத்ரேயனுக்கு மாநிலங்களவை பதவி தொடர்ந்து வழங்கப்பட்ட நிலையில், ஈபிஎஸ் தலைமையேற்ற பிறகு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இதன்பின், ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிமுக மீண்டும் இரண்டாக பிரிந்தபோது, ஒபிஎஸ் அணியில் பயணித்தார். பின்னர் ஓபிஎஸ் தரப்புக்கு தாவினார். இதுபோன்று தொடர்ந்து, ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்புக்கு மாறி மாறி ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி அதிமுகவில் இருந்து மைத்ரேயனை நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த நிலையில், தற்போது மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார் மைத்ரேயன்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…