அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ரெய்டு!

admk former mla

AIADMK : கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு அனைத்து பிரதான கட்சிகளும் ஆயுதமாகி வரும் நிலையில், இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் உள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரபு என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் இறங்கியுள்ளது என கூறப்படுகிறது.

Read More – தூத்துக்குடி மக்களின் போராட்டத்தின் வெற்றி: ஸ்டெர்லைட் தீர்ப்பு குறித்து கனிமொழி கருத்து

அதன்படி, இன்று காலை முதல் பிரபு மற்றும் அவரது தந்தை அய்யப்பா ஆகிய இருவரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபு சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்படுகிறது.

Read More – 7.72 லட்சம் மாணவர்கள்., 3,300 தேர்வு மையங்கள்… இன்று தொடங்கும் +2 பொதுத்தேர்வு.!

இந்த சூழலில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்படும் வழக்கில் பிரபு மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரது வீடு, பண்ணை வீடு பால்பண்ணை உள்ளிட்ட 9 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. பிரபுவின் தந்தை அய்யப்பா, அதிமுகவில் தியாகதுருகம் ஒன்றிய செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More – டெல்லியில் குவிந்த பாஜக தலைவர்கள்.. விரைவில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.!

இதற்கு முன்னதாக நேற்று முன்தினம் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் வீடு மற்றும் அவரது கணவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர். எனவே, மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருவது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்