அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கைது!

RB Udayakumar

RB Udhayakumar: மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் கைது.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உரம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அப்பகுதியில் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசுபடுவதாக அப்பகுதி கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கழிவு நீரால் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர். இதனால் நடந்து முடிந்த மக்களவை தேர்தலை புறக்கணிப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் தொழிற்சாலை செயல்பட்டு வருவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் உரத்தொழிற்சாலையை நிரந்தமாக மூட கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், அப்பகுதி கிராம மக்களுடன் சேர்ந்து இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆர்.பி.உதயகுமார் தலைமையில் இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அதிமுகவை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

அப்போது தொழிற்சாலையை நிரந்தமாக மூடும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர். இந்த சூழலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்துள்ளது. இது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்