பெங்களூரில் இருந்து புறப்படும் போது காரில் அதிமுக கொடியுடன் வந்த சசிகலா, தமிழகம் எல்லைக்கு முன்பு அதிமுக கொடி அகற்றப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சசிகலாவுக்கு உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, பெங்களுர் பண்ணை வீட்டில் தன்னை தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில், இன்று அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை புறப்பட்டார்.
தமிழகம் வரும் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் எல்லையான ஓசூர் ஜூஜூ வாடி அருகே சசிகலா வந்து கொண்டிருந்த காரில் இருந்த அதிமுக கொடி திடீரென அகற்றப்பட்டது. அதிமுக கொடி அகற்றப்பட்ட நிலையில், வேறு ஒரு காருக்கு மாறினார் சசிகலா. ஆனால், அந்த காரிலும் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது.
தற்போது, சசிகலா அதிமுக கொடியுடன் தமிழகம் எல்லைக்கு வந்தடைந்தார். அதிமுக கொடி பயன்படுத்தக்கூடாது என அதிமுக அமைச்சர்கள் காவல்துறையிடம் புகார் கொடுத்த நிலையில், சசிகலா காரில் அதிமுக கொடி அகற்றப்பட்டது. ஆனால், வேறு காருக்கு மாறிய சசிகலா கொடியுடன் தமிழகம் எல்லைக்கு வந்தடைந்தார். சசிகலா, தினகரன் ஆதரவாளர்கள் பிரமாண்ட வரவேற்பு சாலையெங்கும் அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…